நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இது பழமொழி ஆனால்
இன்று நோய் இல்லாத வாழ்வதே கடினம் என்றாகிவிட்டது, இதற்கு முதன்மை காரணம், இன்று எல்லாம் வணிகமயம், மருத்துவம் உட்பட.
சரி முதலில் நம்முடைய “நோய்” என்ற தமிழ் சொல்லுக்கு பொருள் காணலாம்.

நோய் : + ந் பெறுவது(Receive) + ஓ பிரிவது Separate + ய் கணிப்பது identify

நோ என்ற ஒலி, “விலகி இருத்தல்” என்று பொருள் தரும்,
இங்கே நோய் என்பது நம்மை வருத்தக்கூடியது நம் உடல் அந்த நிலையில் எதையும் விரும்பாது, அத்தகைய நிலையில் இருப்பது நோய்.

அடுத்தது வள்ளுவரின் ஒரு குறள்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

MuVa Urai.
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

நோய் நாடி: சரியாக நோய் இது தான் என கண்டறிவது.

நோய் முதல் நாடி : நோயின் காரணத்தையும் கண்டறிவது, இதை பலர் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை ஏனென்றால் இது பெரும்பாலும் மாற்ற கடினமான ஒன்று, உதாரணம் நம்முடைய வாழ்க்கை மற்றும் உணவு முறைகள்.

அது தணிக்கும் வாய் நாடி : சரியான நோய்க்கான மருந்துக்களையும் அதை போக்கும் முறைமைகளை கண்டறிவது.
வாய்ப்ப செயல் : சரியாக பின்பற்றி நோய் நிலையிலிருந்து மீள்வது.

இப்போது உலகமெங்கும் இந்த கொரோனா என்ற பீதி, பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் மக்களை தனிமை படுத்தச்சொல்லி வேகமாக இயங்கி கொண்டிருந்த உலகம் இப்போது கொஞ்சம் மெதுவாக செல்லலாம் என முடிவெடுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, எங்கே சமூகத்தொற்று வந்துவிடுமோ, என்ற அச்சம் யாவரையும் முடக்கி வைத்துள்ளது.
என்னை பொறுத்தவரை இது தேவை இல்லாத அச்சம், இந்த அச்சம் நம் நவீன மருத்தவ முறையில் இருந்து தான் வருகின்றது அவர்கள் இன்று வரை இந்த நோய்க்கான ஒரு சரியான தீர்வை கொண்டுவரவில்லை இதற்கு பல காரணங்களை கூறலாம். முதன்மையானது இது ஒரு வைரஸ் கிருமியால் வருவது, வைரஸ் கிருமிக்கு மருந்து கிடையாது. அதாவது வைரஸால் பாதிக்கப்பட்டால் நம் உடம்பு நம்முடைய எதிர்ப்பு சக்தியால் மட்டுமே அதில் இருந்து வெளி வரவேண்டும். சரி வைரஸ் என்பது என்ன அது உயிரினமா அது எங்கிருந்து நம்மை வந்தடைகின்றது ஏன் நம்முடைய செல்களை மாற்றம் அடையச்செய்து பெருகி நம்முடைய எதிர்ப்பு சக்தியை சோதிக்கின்றது, இவை எல்லாம் இன்றளவும் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கின்ற ஒரு தனி பகுதி, அதனுள் நாம் போகவேண்டாம்.

நாம் இங்கு சிந்திக்க வேண்டியது இந்த எதிர்ப்பாற்றல்,
ஏன் சிலருக்கு மட்டும் இந்த நோய் தாக்குதல் தீவிரமடைந்து மரணம் வரை போகின்றது, ஏன் சிலர் இதனால் எந்த தாக்குதலுக்குண்டான அறிகுறியே இல்லாமல் இருக்கின்றனர், இங்கே நம்முடைய சோதனை முறைகள் எல்லாம் 100% சரி என்ற யூகத்தில் நாம் நம்முடைய நோய் எதிர்ப்பாற்றல் மட்டுமே பெரிய காரணி என்ற வகையில், இந்த எதிர்ப்பாற்றல் ஒருவருக்கு எப்படி வருகின்றது?

இந்த இம்முனிட்டி எனப்படும் எதிர்ப்பாற்றல் பல வித காரணங்களால் நமக்கு கிடைக்கின்றன, சிறுவயது முதல் நம்முடைய பழக்கங்கள், இயற்கை உணவு முறை, இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறை, அதனால் நமக்கு கிடைக்கும் சமநிலை வாழ்க்கை முறை, உணவிற்கு ஏற்ற உடல் உழைப்பு இன்னும் பல, நம்முடைய மூதாதையரிடம் இருந்து வந்த ஜீன்களும் நமக்கு பெரிதும் உதவுகின்றன.

வருமுன் காக்கும் வழிமுறைகள்

சில நோய்கள் தவிர்க்கமுடியாதவை, இருந்தாலும் நாம் ஒரு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் நோய்களிலிருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்ளலாம், இன்னும் நம் உடலில் உள்ள இயற்கையான எதிர்ப்பாற்றலை கொண்டு அதில் இருந்து மீண்டு வரலாம்.

தூய்மை:
இயற்கை சுழற்சியே நம் பூமியை உயிர்களின் உறைவிடமாக மாற்றுகின்றது, பிறப்பு இறப்பும் இந்த சுழற்சியில் ஒரு அங்கம். உழைப்பு உணவு உறக்கம் என நம் வாழிவியலிலும் சுழற்சி தேவை அதுவே நம்மை தூய்மைப்படுத்திக்கொள்ள நமக்கு உதவும். இந்த சுழற்சிக்காகவே பல வித இறை சடங்குகளை நம் முன்னோர்கள் பின்பற்றினர் , இப்பொழுதுள்ள தேவைக்காக நாம் பகுத்தறிந்து காரணத்தோடு செயலாற்றலாம், நம் வாழ்க்கையின் நெடுநாள் தேவைகள் நம்முடைய மறுமை(நம்முடைய சன்னதியரின்) தேவைகள் நமக்கு புலப்படுவதில்லை அதற்கு சில வித நம்பிக்கைகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன.

சூரிய ஒளி நம் உடலை புதுப்பிக்கின்றது, நமக்கு புத்துணர்வை தரும், ஒரு நாளில் சில மணி நேரங்களாவது நாம் வெளியில் வந்து நல்ல காற்றும் சூரிய ஒளியும் பெறுவது நமக்கு இன்றிமையானது. அடுத்த முக்கியமான உயிர் நாடிகளில் ஒன்று நீர். நீரானது நிலையானது அல்ல, அதனாலேயே அது நீர்(ந் + ஈ + ர் receive + give away + transfer). பூமியின் பருவ நிலைக்குக்கேற்ப சுழன்றுகொண்டே இருக்கும். நீர் தண்ணீராக, பனிக்கட்டியாக, நீர்-ஆவியாக இப்படி மாற்றம் ஆகிகொண்டே இருக்கிறது, இந்து மா கடலில் ஆவியாகும் நீர் இமய மழையில் பணியாக மழையாக விழுந்து கங்கையாக மீண்டும் கடலுக்கே வந்து சேரும். நீரால் புறத்தூய்மை பெறலாம் என்று வள்ளுவர் கூறுகின்றார் , ஆம் நம்முடைய உடலும் உடைமைகளும் மற்றும் நம் பூமியை தூய்மை ஆக்க நீர் ஒரு சிறந்த அருமருந்து.

இயற்கை சுழற்சிக்கு வழிவிடுவதே தூய்மை.

நம் உணவு

நம் உணவை பெரும்பகுதியாக உண்போம், ஆம் நம் உணவு, நாம் இருக்கும் இடத்தில் விளையும் உணவு, அது அசைவம் சைவம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, தென்னகத்தில் நாம் ஆப்பிளையும் ஓட்ஸையும் கோதுமையும் தேடி போகவேண்டாம், இங்குள்ள உணவே நமக்கு ஆரோக்கியம், மற்றவைகளை ருசிக்காக குறைவாக புசிக்கலாம். நாம் அயல்நாடுகளில் இருந்தால் அந்தந்த நாட்டில் எது விளைகின்றதோ அதில் சிறந்த இயற்கை உணவுகளை தேர்ந்தெடுத்து உண்போம்.

இயற்கை உணவு

இன்று எல்லாவற்றிலும் மனிதனின் பேராசை கலந்துவிட்டது, ஆம் நாம் உண்ணும் உணவிலும், நம் பேராசை எவ்வளவு குறைவாக உள்ளதோ அதுவே இயற்கை உணவு என்று கொள்ளலாம், பிராய்லர் கோழிகள், அதிகமான ரசாயனம் அடிக்கப்பட்டு வளர்ந்த தானியங்கள், இயற்கை சுழற்சி இல்லாத இடங்களில் விளைந்த பொருட்கள் எல்லாமே நமக்கு பல வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக உள்ளது.

மனஅழுத்தம் மற்றும் நேர்மையான சிந்தனைகள்

இன்றய உலகத்தில் நமக்கு பலவிதமான தேவைகள் அதில் முக்கியமானது பணம், அதற்காக நம்முடைய நேரத்தில் பெரும் பகுதியை செலவழிக்கின்றோம், இன்றய சமூகம் நம்மை அதை நோக்கியே பயணம் செய்ய தூண்டுகிறது. ஆனால் அது மட்டுமே குறிக்கோள் என்று செல்பவர்களுக்கு மன அழுத்தம் மட்டுமே மிஞ்சும். அதனால் நமக்கு வயது முதிர்வில் வரும் நோய்கள் இன்றே வந்து நிற்கும். பெரும்பான்மையாக நிகழும் இருதய நோய்களுக்கு மன அழுத்தம் மட்டுமே பெரிய காரணி என்று கண்டறிந்துள்ளனர்.

தமிழில் செல்வம் என்று சொல் ஒன்றுள்ளது, செல்வம் என்றால் நமக்கு நினைவிற்கு வருவது பொருட்செல்வம், ஆனால் அது மட்டுமல்ல இன்னும் உடல் நலம், கல்வி அல்லது ஞானம் என்று இப்படி செல்வங்களில் பல உள்ளது, ‘பதினாறு’ பெற்று, என பதினாறு செல்வங்களாக வகை படுத்துவர். செல்வத்திற்கு இன்னொரு பெயர் திரு என்று கூறலாம், திரு என்றால் தெய்வ நிலையை குறிப்பது, என் ஓலி ஆராய்ச்சிப்படி ‘திரு’ என்றால் நிலைத்து நிற்பது, என்று பொருள் தரும். அதாவது எல்லாம் சேர்ந்த நிலை.. வடமொழிகளில் திரி அல்லது மூன்று என்ற சொல்லை நினைவிற் கொள்ளலாம். டிரினிட்டி என்று ஆங்கிலத்தி கூறுவார். ஆம் அந்த மூன்றும் சேர்ந்தது தான் இறை நிலை அல்லது முழுமை பெற்ற நிலை, என்பது பல மதங்களில் உள்ள கோட்பாடு
நாம் திரு நிலைக்கு நம்மை கொண்டு செல்ல இந்த வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் ஒன்றை பிறர்க்கு தன்னலமில்லாமல் கொடுத்து பெறவேண்டியதாக உள்ளது, அதற்கு இறைநம்பிக்கை அல்லது நான் எனும் அகந்தையை நீக்கி பொதுநலமாக சிந்தித்தல் அவசியமாகின்றது.

மருத்துவம் மகத்தானது, நவீன மருத்துவம் அளவற்ற முன்னேற்றம் அடைந்துள்ளது.. இருந்தாலும் நோய்களுக்கு பஞ்சமில்லை, எல்லா இடத்திலும் நன்மையும் தீமையும் புதைந்து தான் இருக்கிறது, நாம் ஒவ்வொருவரும் தேடுவது நமக்கு கிடைக்கின்றது, ஆம் நாம் அதற்குரிய விலை கொடுத்து தான் ஆகவேண்டும் அது புரிவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.

நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,

வாழ்க வளமுடன்.